நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்தார்கள், இப்போ என்னாச்சு ? : ஆவேசமான ஈபிஎஸ்
திமுக ஆட்சி வந்தவுடனே நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறினார்கள் , தற்போது என்ன ஆனது என்று எட்ப்பாடிபழனிசாமி கேள்வி எழுப்பினார்.
எடப்பாடிபழனிச்சாமி
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது பேசிய அவர். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தபணிகளை தான் திமுக தொடர்கிறது. எந்த புதிய, பெரிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. மின் கட்டணம், சொத்து வரி உயர்வை மக்களால் எப்படி தாங்கிக்கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
மக்களை ஏமாற்றும் திமுக
திமுக ஆட்சியில் மக்கள் துன்பத்தையும் வேதனையும் தான் அனுபவித்து உள்ளார்கள். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்தார்கள். என்ன ஆனாது? மக்களை ஏமாற்றுகின்றனர் .

திமுக. காவிரி பிரச்னையின் போது அதிமுக சுமார் 22 நாட்கள் நாடாளுமன்றத்தையே முடக்கினோம். தமிழ்நாடு மக்களுக்கான குரல் கொடுத்தோம் என பேசினார்.
மக்கள் கொதித்துபோய் உள்ளனர்
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் அரசு 2021 தேர்தலின்போது கொடுத்த முக்கியமான வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றவில்லை . இதனால் மக்கள் கொதித்துப் போய் உள்ளனர் என்றார்.