சென்னை மக்களுக்கு ஓர் நற்செய்தி - வண்டலூர் பூங்காவில் இன்று முதல் அனுமதி

tngovernment vandaloor zoo
By Petchi Avudaiappan Aug 24, 2021 10:18 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

 கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று முதல் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் அரசு பல்வேறு தளர்வுகளை அளித்து வருகிறது. அதன்படி கடற்கரைகள், கேளிக்கை விடுதிகள்,தியேட்டர்கள் என பல இடங்களிலும் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அந்த வகையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இன்று முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உயிரியல் பூங்காவில் இரண்டு சிங்கங்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் மேலும் 7 சிங்கங்கள் பாதிக்கப்பட்டு கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளது.

இதனால் பூங்காவை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று முடிந்துள்ளது. முறையான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பூங்கா ஊழியர்களும், பொதுமக்களும் கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.