மக்களுக்கான கூட்டணி அதிமுக - பாஜக கூட்டணி - அமித்ஷா பேச்சு
மக்களுக்கான கூட்டணி அதிமுக - பாஜக கூட்டணி மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம். தமிழ்நாட்டிற்கு வந்திருக்கும் நான், தமிழ் மக்களோடு, அவர்களது தமிழ் மொழியில் பேச முடியாததை எண்ணி வருந்துகிறேன் தமிழ்நாட்டின் மொழி, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை, நாடு முழுவதும் உள்ள இந்தியர்கள் மதிக்கின்றனர் எம்ஜிஆர், ஜெயலலிதா வளர்த்தெடுத்த அதிமுக இயக்கத்தோடு, பாஜக கூட்டணி வைத்திருக்கிறது அதிமுக - பாஜக கூட்டணி என்பது, மக்களுக்கான, மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுக்கின்ற கூட்டணி ஆகும் .
மத்தியில் பாஜக தலைமையிலான அரசு, மக்களுக்கான அரசு என்பதை, தாம் பிரதமராக முதன்முறை பதவியேற்றபோதே, மோடி தெளிவாக கூறியிருக்கிறார்
அனைவருக்கும் வீடு திட்டத்தின் மூலம், நாட்டில் வெகுஜனத்திற்கு வீடு என்பதை உறுதி செய்திருக்கிறோம்
காங்கிரசின் 70 ஆண்டுகால ஆட்சியில், பொதுமக்களுக்கு வீடு இல்லை - ஆனால், 7 ஆண்டுகளில் மோடி அரசு அதனை சாத்தியப்படுத்தியிருக்கிறது