வரும் 10 ஆண்டுகளில் சீனாவின் அணு ஆயுதங்கள் 5 மடங்கு அதிகரிக்கும் - வார்னிங் கொடுக்கும் அமெரிக்கா

China nuclear weapon Pentagon
By Irumporai Nov 04, 2021 07:24 PM GMT
Report

அடுத்த 10 ஆண்டுகளில் சீனாவின் அணு ஆயுதங்கள் 5 மடங்கு அதிகரிக்கும்  என அமெரிக்காவின் பெனடகன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவின் பாதுகாப்பு பலம் அதன் ராணுவகட்டமைப்பு குறித்துது அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டசன ஆய்வு செய்து அறிக்கை வெளியிடுகிறது.

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ஆய்வறிக்கையை பென்டகன் நேற்று வெளியிட்டது.

அதன்படி சீனா கடந்த ஒரு வருடத்தில் மட்டும் அமெரிக்க அதிகாரிகள் கணித்ததை விட சீனா தனது அணுசக்தியை மிக வேகமாக அதிகரித்து வருகிறது என எச்சரித்துள்ளது.

வரும்  10 ஆண்டுகளில் சீனாவின் அணு ஆயுதங்கள் 5 மடங்கு அதிகரிக்கும் - வார்னிங் கொடுக்கும் அமெரிக்கா | Pentagon Predicts 5 Times Increase In China

அதன்படி , சீனா  கடந்த ஆண்டு 200 அணு ஆயுதங்களை வைத்திருந்ததாக மதிப்பிடப்பட்டது. ஆனால் தொடர்ந்து அணு ஆயுதங்களை பெருக்கி வருவதால், அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 6 ஆண்டுகளுக்குள் 700 ஆக அதிகரிக்கலாம்.

2030க்குள் 1,000 ஆக உயரலாம்’ என அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. தைவான் விஷயத்தில் சீனாவின் நோக்கங்கள் குறித்து தாங்கள் அதிக எச்சரிக்கையுடன் இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 சீனா புதிய எச்சரிக்கைகள் மற்றும் அணுசக்தி திறன் கொண்ட ஹைபர்சோனிக் ஏவுகணைகள் சோதனை என தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், அமெரிக்கா இந்த புதிய மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.