பென்ஷன்தாரர்களே..முக்கிய அறிவிப்பு, வீடு தேடி வரும் சேவை - அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

India
By Sumathi Nov 08, 2023 10:36 AM GMT
Report

ஓய்வூதியதாரர்கள் தங்கள் வீட்டிலிருந்தே ஆன்லைனில் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியம்

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழை (ஜீவன் பிரமாண் பத்திரம்) ஊக்குவித்து வருகிறது.

pension update

மேலும், கடந்த 2014ஆம் ஆண்டில பயோமெட்ரிக் கருவிகளைப் பயன்படுத்தி டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கும் பணி தொடங்கப்பட்டது.

எங்களுக்கும் ஓய்வூதியம் தாங்க - வழுக்கை தலையால் பாதிக்கப்பட்டவர்கள் சங்கம் அமைத்து கோரிக்கை

எங்களுக்கும் ஓய்வூதியம் தாங்க - வழுக்கை தலையால் பாதிக்கப்பட்டவர்கள் சங்கம் அமைத்து கோரிக்கை

ஆயுள் சான்றிதழ்

இதன் மூலம், ஆண்ட்ராய்டு அடிப்படையிலான ஸ்மார்ட்போன் போன் உதவியுடன் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி அஞ்சல்காரரிடம் ஆதார் எண், மொபைல் எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து,

india

கைவிரல் ரேகையை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில், டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை சமர்பிக்கலாம். சென்னை நகர மண்டலம், கடந்த 2022-23ஆம் நிதியாண்டில், சுமார் 1,16,137 மத்திய, மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கு, தபால்காரர்கள் மூலம் அவர்களின் வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வழிவகை செய்துள்ளது.