வந்த உடன் அதிரடி காட்டிய உதயநிதி! விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் ரூ.6000 ஆக உயர்வு
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற உடன் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் ரூ.3000லிருந்து ரூ.6000 ஆக உயர்த்தி வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார்.
பதவியேற்ற உடன் அதிரடி காட்டிய உதயநிதி
இன்று காலை ஆளுநர் மாளிகையில் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் மற்றும் அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் பதவியேற்ற பின் தலைமைச் செயலகத்திற்கு வந்த அவர் தனது துறை அலுவலகத்தில் மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு உள்ளிட்டோர் அவரை இருக்கையில் அமர வைத்தனர்.
பின்னர் அவர் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியத்தை ரூ.3000-லிருந்து ரூ.6000- ஆக உயர்த்தி வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.