3 ஆயிரம் கி.மீ பயணித்து நியூசிலாந்து சென்ற அண்டார்டிகாவின் அரிய பென்குயின்
Viral
Image
travel
Penguin
By Thahir
அரிதான அண்டார்டிகா பென்குயின் 3,000 கிமீ தூரம் பயணம் செய்து நியூசிலாந்துக்கு சென்ற படங்கள் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
உள்ளூர்வாசிகளால் 'பிங்கு' என்று பெயரிடப்பட்ட இந்த அடேலி வகை பென்குயினை, உள்ளூர்வாசி ஒருவர் கடற்கரையில் கண்டறிந்தார்.
அவர் முதலில் இதனை "மென்மையான பொம்மை" என்று நினைத்ததாகக் கூறினார். நியூசிலாந்தின் கடற்கரையில் அடேலி பென்குயின் கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது சம்பவம் இதுவாகும்.