ஒட்டு மொத்த உலகத்தை குழப்பத்தில் ஆழ்த்திய பென்குயின்
பெரும்பாலானவர்கள் ரசிக்கும் பென்குயின் ஒன்று உலகத்தை குழப்பத்திலும் அதேசமயம் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம் கடந்த 2007ம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாக பலரும் காரணம் என்னவாக இருக்கும் என தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.
திரைப்பட தயாரிப்பாளரான வெர்னர் ஹெர்சாக், 2007ம் ஆண்டு பென்குயின்கள் தொடர்பான ஆவணப்படத்திற்காக அண்டார்டிகாவுக்கு சென்றுள்ளார்.
அங்கு ஒரே ஒரு பென்குயின் மட்டும் தனியாக நடந்து செல்வதை கவனித்துள்ளார்.
Redditors don't understand the penguin. pic.twitter.com/AidHlzrNkE
— Reddit Lies (@reddit_lies) January 22, 2026
70கி.மீ தொலைவில் உள்ள மலைப்பகுதியை நோக்கி நகர்ந்து சென்றதாம் பென்குயின், தனது கூட்டத்தை விட்டு வழிதவறி சென்றிருக்கலாம் என கருதிய நபர்கள், அந்த பென்குயினை மீண்டும் கூட்டத்தில் சேர்த்துவிட்டனர்.
மீண்டும் மலைப்பகுதியை நோக்கி நடக்கத்தொடங்கியதாம், உணவுப்பொருட்களை வைத்து திசைதிருப்ப முயன்ற போதும் தோல்விலேயே முடிந்தது.
இந்த வீடியோ தற்போது வைரலாக பலரும் பென்குயின் அப்படி செய்தது ஏன்? எதை தேடிச் செல்கிறது? என்ன நடந்திருக்கும்? என பல கேள்விகளுக்கு விடைதெரியாமல் குழப்பத்தில் இருக்கின்றனர் சமூகவலைத்தளவாசிகள்.
