மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் நிச்சயம்: தமிழக அரசு எச்சரிக்கை
இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் தமிழகத்திலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகள் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் மோடி நாளை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் தீவிரமடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று முதல் தமிழகத்தில் மாஸ்க் அணிவது கட்டாயம் என்றும் மீறினால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
மேலும் பொது இடங்களிலும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் நிறுவனங்கள் கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பதை உறுதி செய்யுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.