ஆட்ட நாயகன் ஜடேஜாவுக்கு அபராதம் போட்ட ஐசிசி : காரணம் என்ன?
நாக்பூர் டெஸ்ட் போட்டியில் ஐசிசி விதிகளை மீறியதற்காக இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவுக்கு 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா vs ஆஸ்திரேலியா
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 4 போட்டிகள் கொண்ட ஆலன் பார்டர் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. நாக்பூரில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. டாஸ் வெற்றி பெற்று முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
அபராதம்
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி 223 ரன்கள் முன்னிலை பெற்றது.
இந்த நிலையில் நாக்பூர் டெஸ்ட் போட்டியில் ஐசிசி விதிகளை மீறியதற்காக இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவுக்கு 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடுவர்களிடம் தெரிவிக்காமல் கைவிரலில் வலி நிவாரணி மருந்தை பயன்படுத்தியதால் ஜடேஜாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.