பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் அபராதம் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

Chennai
By Thahir Feb 12, 2023 02:37 AM GMT
Report

சென்னையில் பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை ஆணையர் தெரிவித்துள்ளார்.

துாய்மை நகரமாக மாற்ற நடவடிக்கை 

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க சென்னை நகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குப்பைகளை அங்கங்கு கொட்டாமல், குப்பையில்லா சாலைகளாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Penalty for urinating in public places

அடுத்த கட்டமாக மாநகரைத் திறந்தவெளியில் மலம் மற்றும் சிறுநீர் கழித்தல் இல்லாத மாநகரமாக அறிவிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இனி கட்டாயம் அபராதம் 

அதற்காக போதுமான அளவில் கழிப்பறைகள் மற்றும்சிறுநீர் கழிப்பிடங்களை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, இனிமேல் பொது இடங்களில் சிறுநீர் கழித்தால், ரூ.50 அபராதம் விதிக்கப்படும் என்றும், ஏற்கனேவே நடைமுறையில் உள்ள பொதுஇடங்களில் சிறுநீர் கழிப்போருக்கு ரூ.50 அபராதம் விதிக்கும்முறையை அமலுக்குக் கொண்டுவரமுயற்சி மேற்கொண்டு வருவதாக சென்னை ஆணையர் பேட்டி அளித்துள்ளார்.