இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு பெரும் பின்னடைவு - ஆப்பு வைத்த ஐசிசி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய நிலையில் அதன்பின் நடந்த சம்பவம் ரசிகர்களை மட்டுமல்லாது இங்கிலாந்து வாரியத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பிரிஸ்பேனில் கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கியது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் மூலம் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனால் கடும் அதிருப்தியில் இங்கிலாந்து அணி வீரர்களுக்கு ஐசிசியின் அறிவிப்பு பேரிடியாக அமைந்தது. ஆம்..! குறிப்பிட்ட நேரத்திற்கு மேலாக ஓவர் வீச எடுத்து கொண்டதாக கூறி, இங்கிலாந்து வீரர்களின் ஊதியம் 100 சதவீதத்தையும் ஐசிசி அபாரதமாக விதித்துள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இங்கிலாந்து பெற்ற புள்ளிகளிலிருந்து மேலும் 5 புள்ளிகள் குறைக்கப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்தியா தொடரில் 2 புள்ளிகள் குறைக்கப்பட்ட நிலையில் தற்போது இங்கிலாந்து 7 புள்ளிகளை பறி கொடுத்துள்ளது. இதுபோல் குறைக்கப்படும் புள்ளிகளால் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாத நிலை ஏற்படும். இதனால் ஐசிசி நடவடிக்கை ஜோ ரூட்டை கடுப்படைய செய்துள்ளது.
இதே போன்று ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹேட் அநாகரிகமான வார்த்தையை பயன்படுத்தியதாக கூறி, அவருக்கு ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.