கடலில் பேனா சின்னம் : சுற்றுச்சூழல் அறிக்கையை தாக்கல் செய்த தமிழக அரசு
பேனா சின்னம் அமைப்பது குறித்து சுற்று சூழல் குறித்த அறிக்கையினை தாக்கல் செய்தது தமிழக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
பேனா நினைவு சின்னம்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் இருந்து 650 மீ தொலைவில் கடலுக்கு நடுவே சிலை அமைக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
அறிக்கை தாக்கல்
இந்த பேனா சிலை அமைப்பது தொடர்பாக அரசியல் கட்சியினரிடையே எதிர்ப்பும் ஆதரவும் இருந்து வரும் நிலையில் தற்போது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் குழுவிடம் தமிழக பொதுப்பணித்துறை தாக்கல் செய்தது.
தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணைய ஒப்புதலை அடுத்து பேனா நினைவுச் சின்னத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தமிழக பொதுப்பணித்துறை தாக்கல் செய்துள்ளது.
மேலும், விரைவில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு இத்திட்டத்திற்கு கடற்கரை ஒழுங்காற்று மண்டல அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்கவுள்ளது.
கடலில் கருணாநிதி பேனா நினைவுச் சின்னம் அமைக்க மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் பரிந்துரையின் படி அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக பொதுப்பணித்துறை கடிதமும் எழுதியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.