பேனா நினைவு சின்னம் அமைப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்காது - வைகோ

M Karunanidhi Vaiko DMK Chennai
By Thahir Feb 07, 2023 08:54 AM GMT
Report

பேனா நினைவு சின்னம் அமைப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்காது. பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிரான பிரச்சாரம் தேவையற்றது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

பேனா நினைவுச் சின்னம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி நினைவாக, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திற்கு நேராக 650மீ தொலைவில் கடலுக்கு நடுவே ஓர் பேனா சிலை அமைக்க தமிழக பொதுப்பணித்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரிடம் இருந்து ஆதரவும் எதிர்ப்பும் கலந்த வண்ணம் வந்து கொண்டிருக்கிறது. அண்மையில் கூட தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தால் சென்னை கலைவாணர் அரங்கில் கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது.

அதிலும் , பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். அதிலும் ஆதரவு குரலும், எதிர்ப்பு குரலும் எழுந்தன.

சுற்றுச்சூழல் பாதிக்காது 

இந்நிலையில், இன்று மதுரை விமான நிலையத்தில் வைத்து திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில்,

பேனா நினைவு சின்னம் அமைப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்காது - வைகோ | Pen Statue Issue Vaiko Explain

கலைஞர் கருணாநிதியின் சங்கத்தமிழ் காவியத்தின் அடையாளம் தான் பேனா. என குறிப்பிட்டார். மேலும், குஜராத்தில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் தான் தற்போது பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

பேனா நினைவு சின்னம் அமைப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்காது. பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிரான பிரச்சாரம் தேவையற்றது. எனவும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறினார்.