கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பது அவசியம் : திருமாவளவன்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவுச்சின்னம் அமைப்பது அவசியம் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
பேனா எதிர்ப்பு
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேனா நினைவு சின்னம் அமைக்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்தவுடன் பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளன.
பேனா சிலை அவசியம் திருமா
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் திருச்சி புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவுச்சின்னம் அமைப்பது அவசியமானது. இந்த சின்னம் பொதுமக்கள் அனைவரும் வரவேற்கும் கூடிய வகையில் இருக்க வேண்டும். அதேபோல் முதல்வர் மு.க.ஸ்டாலின் இதை கவனத்தில் கொண்டு முடிவு எடுப்பார் என தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் கட்சியில் களப்பணி செய்பவர்களுக்கே நிதி வழங்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு ஆடியோவில் பேசி இருப்பார். இடைத் தேர்தல் நியாயமாக நடக்கும். ஈரோடு கிழக்கு தொகுதியில் எதிர்க்கட்சிகள் போட்டியிட்டாலும் திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு உறுதியாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.