வடிவேலு காமெடி போல பேனா சின்னத்தை காணாமல் செய்துவிடுவேன் : சீமான் கருத்து
வடிவேலுவின் கிணத்த காணோம் காமெடி போல, பேனா சின்னத்தை காணாமல் செய்துவிடுவேன் என நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
பேனா நினைவுசின்னம்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நிமைவாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் இருந்து 650 மீ தொலைவில் கடலுக்கு நடுவே பேனா சிலை அமைக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் பேனா சின்னம் அமைப்பது தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர்.

சீமான் கருத்து
பேனா சின்னம் அமைப்பது தொடர்பான கருத்து கூட்டத்தில் பேசிய சீமான் பேனா சின்னம் வைத்தால் நான் உடைப்பேன் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் மேடை ஒன்றில் பேசிய சீமான், மீண்டும் சொல்கிறேன், பேனா சின்னம் வைத்தால் நான் வந்து நிச்சயம் உடைப்பேன் என தெரிவித்துள்ளார். தேசிய கடல் சார் தினத்தை முன்னிட்டு இந்திய கடலோடிகள் நல அமைப்பு சார்பாக சென்னை துறைமுகத்தில் கருத்தரங்கு நடைபெற்றது.
கலந்து கொண்டு பேசிய சீமான் ” நான் திரும்பவும் சொல்கிறேன் பேனா சின்னம் வைத்தால் நிச்சயம் உடைப்பேன். அப்படி அந்த பேனா என்ன எழுதிவிட்டது.
கடல் கடலாக இருக்க வேண்டும். அது குப்பை மேடு அல்ல. வடிவேலுவின் கிணத்த காணோம் காமெடி போல, பேனா சின்னத்தை காணாமல் செய்துவிடுவேன்” என கூறி மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளர்.