விடைபெற்றார் பீலே.... - தொடங்கிய இறுதி ஊர்வலம்... - லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி...!

Football Viral Video Death
By Nandhini Jan 03, 2023 02:21 PM GMT
Report

விடைபெற்றார் பீலே

கடந்த 30ம் தேதி பிரேசில் கால்பந்து நட்சத்திரம் பீலே தனது 82 வயதில் உயிரிழந்தார். இதனையடுத்து, பிரேசில் நாட்டின் சாவ் பாலோ மருத்துவமனையில் உள்ள பீலேவின் உடல் இன்று காலை அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டு சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ மைதானத்தில் வைக்கப்பட்டது. உள்ளூர் நேரப்படி நேற்று காலை 10 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர்.

இந்நிலையில், பீலேவின் முன்னாள் கிளப் சாண்டோஸின் இல்லமான அர்பானோ கால்டீரா மைதானத்தில் இறுதி ஊர்வலம் தொடங்கியது. மேலும் அவரது சவப்பெட்டி சாண்டோஸ் நகரின் தெருக்களில் கொண்டு செல்லப்படும். இதில் பீலேவின் 100 வயதான தாயார் செலஸ்டி அராண்டஸ் வசிக்கும் தெரு வழியாகச் செல்ல உள்ளது.

"விலா பெல்மிரோ" என்று பிரபலமாக அறியப்படும் சாண்டோஸின் 16,000 இருக்கைகள் கொண்ட அரங்கத்தில் நேற்று தொடங்கிய அவரது 24 மணி இறுதி அஞ்சலிக்காக மக்கள் திரண்டனர். பீலே விற்கு உலகம் முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

pele-brazil-legend-funeral-and-burial-santos

150,000 க்கும் அதிகமான மக்கள், பலர் பிரேசிலின் சின்னமான மஞ்சள் T.Shirtடை அணிந்திருந்தனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை வரை கலந்துகொண்டதாக சாண்டோஸ் தெரிவித்தார். ஆயிரக்கணக்கான துக்கக்காரர்கள் இன்னும் வரிசையில் இருந்ததால் மைதானத்தின் கதவுகள் மூடப்பட்டன.

மக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். பிரேசிலியர்களின் சவப்பெட்டியைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் இப்போது தெருக்களில் வரிசையாக நின்றுக்கொண்டிருக்கின்றனர்.

60 ஆண்டுகளுக்கும் மேலாக, பீலே என்ற பெயர் கால்பந்துக்கு ஒத்ததாக உள்ளது. அவர் 4 உலகக் கோப்பைகளில் விளையாடினார். வரலாற்றில் 3 உலக கோப்பை வென்று சாதனைப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.       

இறுதியில் 4.4 ஏக்கர் நிலப்பரப்பில், 14 அடுக்கு மாடிகளை கொண்ட நெக்ரோபோல் எகுமெனிகா நினைவு கல்லறை தோட்டத்தில் பீலேவின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

இங்குள்ள பெட்டகத்தில் பதப்படுத்தப்பட்ட அவரது உடல் வைக்கப்படுகிறது. ஏறக்குறைய 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெட்டகங்கள் இங்கு இருக்கின்றன. இது தான் உலகிலேயே மிக உயரமான கல்லறை தோட்டமாகும். இங்கு நடக்கும் இறுதி சடங்கில் அவரது குடும்பத்தினர் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை. கால்பந்து நாயகன் பீலேவின் உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.