இந்த அரசாங்கம் பெகாசஸ் மூலம் என்னை வேவு பார்த்தது : ராகுல் காந்தி திடுக்கிடும் தகவல்

Indian National Congress Rahul Gandhi
By Irumporai Mar 03, 2023 05:49 AM GMT
Report

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தற்போது வயநாடு தொகுதியின் எம்பியுமான ராகுல் காந்தி லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைகழ்கத்தில் உள்ள மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

ராகுல் பேச்சு

அப்போது பேசிய ராகுல் : ஜனாநாயகத்திற்கு அவசியமான அமைப்புகள் தடுக்கப்படுவதாக கூறிய ராகுல் காந்தி இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பான ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாக கூறினார்.

இந்த அரசாங்கம் பெகாசஸ் மூலம் என்னை வேவு பார்த்தது : ராகுல் காந்தி திடுக்கிடும் தகவல் | Pegasus Used To Spy On Me Rahul Gandhi

 பெகாசஸ் உளவு

மேலும் பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி மத்தியில் ஆளும் அரசு தன்னை வேவு பார்த்ததாக கூறினார், அப்போது பெகாசஸ் உளவு செயலி குறித்து உளவுத்துறை அதிகாரிகள் என்னை எச்சரித்தனர் , அரசியல் கட்சி தலைவர்களின் பலரது செல்போன்களில் பெகாசஸ் செயலி உள்ளது ஆகவே உங்கள்து செல்போனில் பேசும் போது கவனமாக பேசுங்கள் என எச்சரித்தனர் எனக் கூறினார்.