உலக அளவில் வெடிக்கும் பெகசிஸ் ஸ்பைவேர் ஹேக்: குழப்பத்தில் உலக நாடுகள்

Hacked pegasus worldleaders
By Irumporai Jul 21, 2021 09:56 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

பெகசிஸ் ஸ்பைவேரால் ஹேக் செய்யப்பட்டவர்கள் பட்டியலில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரான், பாகிஸ்தான் பிரதமர் இம்ராக் கான், தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ராமபோசா உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த தலைவர் பட்டியல் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் தற்போது உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது.

ஆம், பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானின் தொலைபேசி எண்ணும் உளவு பார்க்கபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2017-ஆம் ஆண்டு முதல் இமானுவேல் தொலைபேசி , மொராக்கோ நாட்டு உளவுத்துறையால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்ததாக, பிரான்ஸின் LE MONDE நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் மொராக்கோவின் மன்னர் ஆறாம் முகமது, , தென்னாபிரிக்காவின் சிரில் ராம்போசா என்ற மூன்று நாட்டின் அதிபர்கள், பாகிஸ்தானின் இம்ரான் கான், எகிப்தின் முஸ்தபா மதுபௌலி, மொரோக்காவின் சாத் எடின் எல் ஒத்மானி என மூன்று நாட்டு பிரதமர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் கூடுதலாக லெபனானின் சாத் ஹரிரி, உகாண்டாவின் ருஹகானா ருகுண்டா, அல்ஜீரியாவின் நௌரெட்டைன் பெடோய் மற்றும் பெல்ஜியத்தின் சார்லஸ் மைக்கேல் உள்ளிட்ட ஏழு முன்னாள் தலைவர்கள் அவர்கள் பதவியில் இருந்த காலத்தில் வேவு பார்க்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

இந்திய அரசியலில் புயலை கிளப்பிய பெகசிஸ் விவகாரம் தற்போது உலக அரசியலிலும் புயலை கிளப்பியுள்ளது.