‘‘என்னது உளவு பாக்குறாங்களா போனை மாத்துங்க ஆபிசர்” : மொபைல் போனைமாற்றிய பிரான்ஸ் அதிபர்!

macron spy pegasus changephone
By Irumporai Jul 23, 2021 03:27 PM GMT
Report

இந்திய அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்திய பெகாசஸ் விவகாரம் இந்தியா போலவே பிரான்ஸ், மெக்சிகோ, மொராக்கோ, ஈராக் என பல நாடுகளிலும் முக்கிய பிரமுகர்களும்  உளவு பார்க்கப்பட்டதாக உலகளவில் அதிர்வலைகள் ஏற்படுத்தியது.

இந்த நிலையில் உளவுப்பார்க்கப்பட்டவர்கள் பட்டியலில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் இருப்பதாக செய்தி வெளியானது.

ஆகவே  மேக்ரான் தற்போது தனது மொபைல் ஃபோனையும், மொபைல் நம்பரையும் மாற்றியுள்ளாதாக கூறப்படுகிறது.

பெகாசஸ் பிரச்னை வெளிச்சத்துக்கு வந்ததை தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும், மேக்ரானின் செல்போன் ஒட்டுக்கேட்கப்பட்டதை தாங்கள் உறுதிசெய்வில்லை என்று அதிபரின் அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக முன்னெச்சரிக்கையாக இப்படி சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் அதிபரின் பாதுகாப்பு வட்டாரங்கள்.