நீங்க நிம்மதியா தூங்க காரணமே தொழில்நுட்பங்கள் தான் : அதிர்ச்சி விளக்கம் கொடுத்த பெகாஸஸ் நிறுவனம்

2 months ago

பல லட்சக்கணக்கானோர் இரவில் நிம்மதியாக தூங்குவதற்கு தொழில்நுட்பங்களே காரணம் என என்எஸ்ஒ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் நாட்டை சேர்ந்த என்எஸ்ஒ நிறுவனம் தயாரித்த பெகாஸஸ் மென்பொருள் மூலம் உலக தலைவர்கள் வேவு பார்க்கப்பட்டதாக தி வயர் இணையதளம் வெளியிட்ட செய்தி பெரும் சர்ச்சையினை உலக அளவில் பேசுபொருளானது.

இதனால் ஒரு பிரபல அதிபர் தனது செல்போனையே மாற்றியதாக செய்திகளும் வெளியாகின.

இந்த நிலையில், பல லட்சக்கணக்கானோர் இரவில் நிம்மதியாக தூங்குவதற்கு இம்மாதிரியான எங்கள் தொழில்நுட்பங்களே காரணம் என பெகாஸஸ் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து என்எஸ்ஒ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அளித்துள்ள விளக்கத்தில் .

புலனாய்வு அமைப்புகளிடம் இம்மாதிரியான தொழில்நுட்பம் இருப்பதன் காரணமாகத்தான் மக்கள் வீதிகளில் பாதுகாப்பாக நடமாடுகிறார்கள். தொழில்நுட்பத்தை வாங்கியவர்கள் சேகரித்த தரவுகள் எங்களிடம் இல்லை.

அதேபோல், பெகாஸஸ் தொழில்நுட்பத்தை நாங்கள் பயன்படுத்தவதில்லை. பல அரசுகளுக்கு என்எஸ்ஒ போன்ற சைபர் புலனாய்வு நிறுவனங்கள் தான் பயன்படுத்துகின்றன.

ஏனெனில், புலனாய்வு அமைப்புகளுக்கு இதுகுறித்த புரிதல் இல்லை. சமூக வலைதளங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பயங்கரவாத செயல்களை கண்காணிக்க ஒழுங்காற்று ஆணையங்கள் இல்லை.

பாதுகாப்பான உலகை படைக்க எங்களால் முடிந்த அனைத்தையும் மேற்கொள்கிறோம். மென்பொருள் தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்