பெகாசஸ் விவகாரம் எதிர்கட்சியின் சதித்திட்டம் - அமித்ஷா விளக்கம்

interpretation pegasus amitsha
By Irumporai Jul 19, 2021 05:09 PM GMT
Report

 பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் இந்திய அரசியலில் பெரும் அதிரவலையினை ஏற்படுத்தியுள்ள நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கமளித்துள்ளார்.

மத்திய அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரின் தொலைபேசி அழைப்புகளை மத்திய அரசு ஒட்டுக்கேட்டதாக எழுந்துள்ள புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து விளக்கமளித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், மத்திய அரசு யாரையும் ஒட்டு கேட்கவில்லை என கூறியிருந்தார்.

பெகாசஸ் விவகாரம்  எதிர்கட்சியின் சதித்திட்டம் - அமித்ஷா விளக்கம் | Pegasus Affair Amit Shah Interpretation

ஆனால் வைஷ்னவ் தொலைபேசியையே 2017 முதலாக ஒட்டு கேட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதோடு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பிரசாந்த் கிஷோர் போன்ற பலரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படுவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இஸ்ரேலிய தயாரிப்பான பெகாசஸ் இணையப் பாதுகாப்பு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ரகசிய மென்பொருளைப் பயன்படுத்தி இந்திய அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை என மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் இந்தியாவினை உலக அரங்கில் களங்கம் கற்பிக்கும் நோக்கில்தான் பெகாசஸ் விவகரம் வெளியாகிறது. இந்தச் சதித் திட்டங்கள்மூலம் இந்தியாவில் வளர்ச்சியை யாராலும் தடம் புரள வைக்க முடியாது எனத்தெரிவித்துள்ளார்.