தைப்பூசத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
தைப்பூசத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தைபூசம்
எதிர்வரும் தைப்பூசத்தை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் நியமிக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
அதாவது இன்றிரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூரில் புறப்படும் பின்னர் நாளை காலை 11.15 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.
இவ்வாறு புறப்படும் ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, மதுரை ரயில்நிலையங்களில் இந்த சிறப்பு ரயில் நின்று செல்லும் என அறிவிக்கபட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு 10.35 மணிக்கு திருநெல்வேலியில் புறப்பட்டு பின்னர் திங்கள் கிழமை காலை 9.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இந்த ரயிலில் 18 பெட்டிகள் மற்றும் 3 அடுக்கு ஏசி மட்டும் உள்ளது. இதில் முன்பதிவில்லா பெட்டி கிடையாது. இதே போன்று, சென்னை தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் நாளை இரவு 11.45 மணிக்கு புறப்படும்.

இந்த ரயில், ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் தூத்துக்குடியை சென்றடையும். இந்த ரயில் வேறு பாதையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.55 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், திங்கட்கிழமை காலை 11.30 மணிக்கு சென்னை கடற்கரையை அடையும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயிலில் இருக்கை வசதி கொண்ட 12 பெட்டிகள், ஏசி வசதி கொண்ட 2 பெட்டிகள் மற்றும் இதில் 4 முன்பதிவில்லா பெட்டிகள் உள்ளன என கூறப்பட்டுள்ளது.