சர்வதேச திரைப்பட விழாவில் 'கூழாங்கல்' திரைப்படத்திற்கு டைகர் விருது

Nayanthara Vignesh Shivan Pebble Movie
By Thahir Aug 08, 2021 12:35 PM GMT
Report

நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இணைந்து தங்களது ‘ரவுடி பிக்சர்ஸ்’ பேனரில் தயாரித்து வெளியிடவுள்ள திரைப்படம் ‘கூழாங்கல்’.

அறிமுக இயக்குனரான வினோத் ராஜ் இந்த படத்தை இயக்கி உள்ளார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தொடர்ச்சியாக பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் 'கூழாங்கல்' திரையிடப்பட்டு வருகிறது. அதற்கு நல்ல வரவேற்பும் கிடைக்கிறது.

ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட 'கூழாங்கல்' படத்திற்கு டைகர் விருது கொடுக்கப்பட்டது. அந்த விருதுடன் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் எடுத்துக் கொண்டுள்ள போட்டோவை தற்போது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர்.