“போகாதே..போகாதே..நீ பிரிந்தால் நான் இறப்பேன்” - மரணத்தை தாங்கமுடியாமல் மயில் செய்த காரியம்

rajasthan peacock video viral bids a bye partner peacock
By Swetha Subash Jan 05, 2022 06:43 AM GMT
Swetha Subash

Swetha Subash

in சமூகம்
Report

மரணத்தையும், பிரிவையும் தாங்கமுடியாமல் ஏக்கத்துடன் மயில் செல்லும் வீடியோ அனைவரையும் கண்கலக்க வைக்கிறது.

ராஜஸ்தானில் 4 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த ஒரு மயிலின் மரணத்தை ஏற்கமுடியாமல் தவித்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இறுதிசடங்கிற்காக எடுத்துச்செல்லும்போது பின் தொடரும் மயிலின் ஏக்கம் அனைவரையும் கண்கலக்க வைக்கிறது. மனிதர்களுக்கு மட்டும் இல்லை, பறவைகள், விலங்குகள் போன்ற ஐந்தறிவு ஜூவ ராசிகளுக்கும் பிரிவு என்பது ஒன்று தான்.

இப்படி தான் ராஜஸ்தானில் 4 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த மயில் தன்னுடன் இருந்த மற்றொரு மயிலை பிரிய முடியாமல் செய்த செயல் பார்ப்போரைக் கண்கலங்க வைக்கிறது.

ராஜஸ்தானில் மாநிலம் குசேராவை சேர்ந்த ஸ்ரீ ராம்ஸ்வரூப் பிஷ்னோய் என்பவரது வீட்டில், கடந்த நான்கு ஆண்டுகளாக இரண்டு மயில்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளது.

இந்நிலையில் உடல்நிலைக்காரணமாக இரண்டு மயில்கள் ஒன்று எதிர்பாராதவிதமாக உயிர் இழந்தது. இதனையடுத்து உயிரிழந்த மயிலின் உடலை துணியில் வைத்து, இறுதிச்சடங்கிற்காக எடுத்துச்செல்லும் போது மற்றொரு மயில் அவர்களின் பின்னே செல்கிறது.

மரணத்தையும், பிரிவையும் தாங்கமுடியாமல் ஏக்கத்துடன் மயில் செல்லும் வீடியோ அனைவரையும் கண்கலங்க வைக்கிறது. பொதுவாக பிரிவு என்பது அனைத்து ஜீவராசிகளுக்கும் ஒன்று தான் என்பதைத் தெளிவாக இந்த வீடியோ வெளிப்படுத்துகிறது.

இந்த வீடியோவை ஐஎஃப்எஸ் அதிகாரி ப்ரவீன்குமார், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டுவருகின்றனர்.

குறிப்பாக “ எந்தவொரு மரணத்தையும் ஆரம்ப நாள்களில் அன்புக்குரியவர்களை மறப்பது மிகவும் கடினமாக இருக்கும் என்பதை இந்த சிறிய கிளிப் வெளிப்படுத்துகிறது.

நெஞ்சை ரணமாக்குகிறது எனவும் பதிவிட்டுள்ளார். மேலும் வண்ணமயமான மயிலின் அழகைப்பார்ப்பதே ஒரு தனி ரசனை எனவும் பதிவுகளை டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.