‘எனக்கு பதவியே வேண்டாம்’ - கிரிக்கெட் அணியை விட்டு விலகிய பயிற்சியாளர்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து முன்னாள் வீரர் மிஸ்பா-உல்-ஹக் ராஜினாமா செய்துள்ளார்.
நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி செப்டம்பர் 17 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான பாகிஸ்தான் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து மிஸ்பா-உல்-ஹக்கும், அவருடன் சேர்ந்து பந்துவீச்சு பாயிற்சியாளர் வாக்கர் யூனிஸும் விலகியுள்ளனர்
. இருவரும் ஒரே நேரத்தில் பதவியை ராஜினாமா செய்தது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்று ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மிஸ்பா-உல்-ஹக் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
அவரது ஒப்பந்தம் முடிய இன்னும் ஒரு ஆண்டு காலம் உள்ள நிலையில் ராஜினாமா செய்துள்ளார். முன்னாள் கேப்டனான இவர் தான் 2007 ஆம் ஆண்டு நடந்த முதல் டி20 உலகக் கோப்பையில் இறுதிப்போட்டி வரை பாகிஸ்தான் அணியை முன்னேற செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.