பொறுப்பில்லாமல் ஆடிய வீரர்கள் - சென்னை அணி ஹாட்ரிக் தோல்வி
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஐபிஎல் 15வது சீசன் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணியில் லியாம் லிவிங்ஸ்டன் 60, ஷிகர் தவான் 33 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது . சென்னை அணி தரப்பில் கிறிஸ் ஜோர்டான், பிரிட்டோரியஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய . சென்னை அணி தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணி வீரர் ஷிவம் துபே சிறப்பாக விளையாடி அரைசதமடித்தார். 18 ஓவர்களில் சென்னை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஏற்கனவே சென்னை அணி தனது முதல் 2 ஆட்டங்களில் தோல்வியை தழுவிய நிலையில் தற்போது இதையும் சேர்த்து ஹாட்ரிக் தோல்வியாக உள்ளதாக குறிப்பிடத்தக்கது.