பழ. நெடுமாறனுக்கு கொரோனா உறுதி

hospital politician fever
By Jon Feb 13, 2021 05:17 PM GMT
Report

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறனுக்கு கொரோனா உறுதியாகி இருப்பதால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக அவருக்கு லேசான காய்ச்சல் இருந்துள்ளது, இதனால் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால், பழ.நெடுமாறன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பழ.நெடுமாறனின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.