இதற்கெல்லாம் நீங்கள் கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லை : விளக்கம் கொடுத்த பேடிஎம்

By Irumporai Mar 29, 2023 07:42 AM GMT
Report

ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் வெளியான நிலையில், இது குறித்து பேடிஎம் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

 டிஜிட்டல் பண பரிவர்த்தனை

இந்தியா முழுவதும் பல்வேறு பணப்பரிவர்த்தனைகளும் ஆன்லைன் மூலமாகவும், கூகிள் பே, போன் பெ, பேடிஎம் போன்ற பணப்பரிவர்த்தனை செயலிகள் வழியாகவும் நடந்து வருகிறது.

பேடிஎம் விளக்கம் 

இந்த நிலையில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியானது ஏப்ரல் 1 முதல் ரூ.2000க்கும் அதிகமான பணப்பரிவர்த்தனைக்கு 1% கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என வெளியான அறிவிப்பு மக்களை குழப்பத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

இதற்கெல்லாம் நீங்கள் கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லை : விளக்கம் கொடுத்த பேடிஎம் | Paytm Said They Not Charge For Any Fee Bank

இந்த 1% கூடுதல் கட்டணம் பரிவர்த்தனை செயலிகளின் வாலட்டிலிருந்து பரிவர்த்தனை செய்தால் மட்டுமே என கூறப்படுகிறது.

இதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ள பேடிஎம் நிறுவனம், நேரடி (வங்கி டூ வங்கி) பணப்பரிவர்த்தனைகள் எப்போதும் போலவே தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

அதுபோல வாலட்டுகளில் பணத்தை வைப்பதற்கோ அதை பிற நபர்களுக்கோ அனுப்புவதற்கும் எந்த கூடுதல் கட்டணமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.