அந்த 'திரையுலகில்' அறிமுகமாயிருந்தால் உடைகளை கழற்றி.. - நடிகை பாயல் கோஷ் தாக்கு!
நடிகை பாயல் கோஷ் இந்தி திரையுலகை குறித்து சர்ச்சையான கருத்தை வெளியிட்டுள்ளார்.
பாயல் கோஷ்
பிரயாணம் என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானவர் பாயல் கோஷ். தொடர்ந்து வர்ஷதாரே, ஊசாரவெள்ளி, மிஸ்டர் ராஸ்கல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். தமிழில் 'தேரோடும் வீதியிலே' படத்தில் பாயல் கோஷ் நடித்துள்ளார்.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டினார். அவர் மீது காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.
ஆனால் பின்னர் அமைதியாகிவிட்டார். இந்நிலையில் தற்போது இந்தி திரையுலகை தாக்கி பேசி ஒரு சர்ச்சையான கருத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பாயல் கோஷ்.
சர்ச்சை கருத்து
அவர் கூறியதாவது "தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானதால் நான் தப்பித்து கொண்டேன். இந்தி சினிமாவில் அறிமுகமாகியிருந்தால் என் உடைகள் அனைத்தையும் கழற்றி, என்னை நிர்வாணமாக காட்டியிருப்பார்கள்.
அங்கே கிரியேட்டிவிட்டியைவிட உடல் அழகுக்குத்தான் முக்கியத்துவம் தருகிறார்கள். உடலை முழுமையாக காட்டுவதில் இருக்கும் அக்கறையை நடிப்புக்கு தருவதில்லை. ஆபாசமான காட்சிகள் மீதுதான் அவர்களின் படங்கள் ஆதாரப்பட்டு இருக்கின்றன" என்று கூறியுள்ளார்.
பாயல் கோஷின் இந்த கருத்து ஒட்டுமொத்த பாலிவுட் திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . திரையுலகினர் பலரும் அவரை வசைபாடி வருகின்றனர். ஆனாலும் தனது கருத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்று பாயல் கோஷ் தெரிவித்துள்ளார்.