பிரபல நடிகை மீது தாக்குதல், ஆசிட் வீச முயன்றதால் பரபரப்பு
பிரபல நடிகை பாயல் கோஷ் மீது மர்ம நபர்கள் ஆசிட் வீச முயற்சித்துள்ள சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'பிரயாணம்', 'ஊசரவெலி', 'மிஸ்டர் ராஸ்கல்' உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும், 'படேல் கி பஞ்சாபி ஷாதி', 'கொய் ஜானே நா' உள்ளிட்ட ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளவர் பாயல் கோஷ்.
இவர் தனது இன்ஸ்டாகிராமிவல் வெளியிட்டுள்ள விடியோவில் கூறியிருப்பதாகவது, ''சமீபத்தில் நான் மும்பையில் காரில் சென்று கொண்டிருந்தேன்.
அப்போது முகமூடி அணிந்திருந்த சில மர்ம நபர்கள் என்னை சுற்றி வளைத்து தாக்க முற்பட்டனர். அவர்களிடம் இருந்து தப்பிக்கவும், பொதுமக்களின் உதவியை நாடவும் நான் கத்தி கூச்சலிட்டேன்.
அப்போது ஒருவன் இரும்பு கம்பியால் என்னைத் தாக்க முற்பட்டான். நான் தடுக்க முயற்சித்த போது என் கையில் பலத்த அடிபட்டது.
அவர்கள் கையில் பாட்டில் ஒன்றை வைத்திருந்தனர். அது ஆசிட் ஆக இருக்கக் கூடும். நல்ல வேளையாக என் சத்தம் கேட்டு மக்கள் கூடினர்.
என் வாழ்நாளில் இப்படியொரு தாக்குதலை சந்தித்ததில்லை. இனியும் சந்திக்கக் கூடாது என விரும்புகிறேன் என்றார்.
இதனையடுத்து அவரை மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவாலே சந்த்தித்து ஆறுதல் கூறினார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பாயல், தன் மேல் காட்டிய அக்கறைக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.