ஆந்திர போலீசாருக்கு 6 விரல்களை காட்டிய பவன் கல்யாண் - இதான் காரணமா?
ஆந்திர போலீசாருக்கு 6 விரல்கலைகளை காட்டிய பவன் கல்யாணின் வீடியோ வைரலாகி வருகிறது.
சந்திரபாபு நாயுடு கைது
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை ஆந்திராவின் முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு இருந்த போது, திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியில் ரூ.550 கோடி வரை ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதன் காரணமாக கைது செய்யப்பட்டுள்ள அவருக்கு நேற்றிரவு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் அளிக்கப்பட்டு ராஜமகேந்திரவரம் சிறையில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட சந்திரபாபு நாயுடுவை சந்திக்க பவன் கல்யாண் முற்பட்டு, ஐதராபாத்திலிருந்து விஜயவாடா சென்றுகொண்டிருந்த அவரை ஆந்திர காவல்துறையினர் மாநில எல்லையில் வைத்தே தடுத்து நிறுத்தினர்.
மேலும், சட்டம்,ஒழுங்கு நிலைமையைக் கருத்தில் கொண்டு, சந்திரபாபு நாயுடுவை பவன் கல்யாண் சந்திக்கக் கூடாது என ஆந்திர மாநிலத்துக்குள் நுழையத் தடை விதித்தனர்.
பவன் கல்யாண்
இதனால் பவன் கல்யாண் காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஆந்திர பிரதேசம்-தெலுங்கானா எல்லையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் படுத்து போராட்டம் நடத்தினார்.
இது குறித்த புகைப்படங்கள் மற்றும், வீடியோக்கள் சமூக வலைதடலங்களில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதில் தன்னை தடுத்து நிறுத்திய போலீஸாரிடமும், ஜனசேனா ஆதரவாளர்களிடமும் பவன் கல்யாண் தனது ‘ஆறு’ விரல்களைக் காட்டும் வீடியோ ஒன்று அதிக அளவு பகிரப்பட்டு வைரலானது.
2024 தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் தான் இருக்கிறது. அதன்பின் ஆட்சி மாறும் என்பதை உணர்த்தும் வகையில் பவன் தனது ஆறு விரல்களை காட்டியுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த வீடியோவை இப்போது பவன் கலையான ரசிகர்கள் மற்றும் தொண்டர்களால் சமூக வலைதடலங்களில் அதிகமாக பகிரப்படுகிறது.
Just 6Months More @PawanKalyan ?? pic.twitter.com/k0DOXSFFFC
— .... (@ItzRCCult) September 11, 2023