டெபாசிட் கூட வாங்காத பவன் கல்யாண் கட்சி!! மண்ணை கவ்விய ஜனசேனா..!
நடைபெற்று முடிந்த தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிபெருபான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது.
ஜன சேனா
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த நடிகர்களில் பலரும் பெரிதான வெற்றியை பெற்றிடவில்லை. தமிழகத்தில் எம்.ஜி.ஆர் - ஆந்திரத்தில் என்.டி.ஆர் ஆகியோர் அரசியலலிலும் தங்களது ஆதிக்கத்தை அழுத்தமாக பதித்த சென்றனர்.
அதனை தொடர்ந்து அரசியலுக்கு வந்த பலரும் தோல்வியுற்று வரும் நிலையில், தீவிர அரசியலில் களமிறங்கியவர் பவன் கல்யாண். ஜனசேனா என்ற கட்சியை 2014-இல் துவங்கிய அவர், 2018-ஆம் ஆண்டின் ஆந்திர சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார்.
டெபாசிட்டை இழந்த பவன்
ஆனால், அந்த தேர்தலில் மொத்த தொகுதியிலும் தோல்வியுற்ற போதிலும், தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகின்றார் பவன் கல்யாண். ஆனால், அவரின் அரசியல் பெரும் விமர்சனங்களை பெற்று வருகின்றன.
ஓபன் வாகனத்தில் செல்வது, காரில் இருந்து இறங்கி தொண்டர்களிடம் பேசுவது என தொடர் பப்ளிசிட்டி செய்த வந்தார் பவன் கல்யாண். பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள ஜன சேனா தற்போது நடந்து முடிந்த தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கினார் பவன் கல்யாண். 8 தொகுதிகளில் களமிறங்கிய ஜனசேனா, மொத்த இடங்களிலும் டெபாசிட்டை இழந்துள்ளது.