மு.க.ஸ்டாலினை பாராட்டிய தெலுங்கு பவர் ஸ்டார் - என்ன சொன்னார் தெரியுமா?
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜனசேனா தலைவரும் தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்களை கடந்துள்ளது. முதல்முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் சிறப்பாக பணியாற்றுவதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும்,பிரபலங்களும், தமிழக மக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஜனசேனா தலைவரும் தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில் அன்புக்குரிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வர வேண்டுமென்றால் அரசியல் செய்ய வேண்டும். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக் கூடாது. அதை வார்த்தைகளால் அல்ல, செயல்பாடுகளால் நீங்கள் செய்து வருகிறீர்கள்.
உங்களது ஆட்சி நிர்வாகம், உங்கள் அரசின் செயல்பாடுகள், உங்கள் மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கும் விதத்தில் உள்ளது.உங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார். இதனை திமுக தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
To Hon. CM @mkstalin garu, pic.twitter.com/iIo0YMD1vT
— Pawan Kalyan (@PawanKalyan) August 31, 2021