பாவனியை பாடாய்படுத்தும் அமீர் .. கண்ணீருடன் வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி

Bigg Boss Pavani Reddy
By Petchi Avudaiappan May 19, 2022 11:59 PM GMT
Report

நடிகை பாவனி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

பிக்பாஸ் தமிழ் சீசன் 5ல் போட்டியாளர்களாக கலந்து கொண்ட பாவனி மற்றும் அமீர் இடையேயான நெருக்கம் அந்நிகழ்ச்சி முடிந்த பின்னர் பொதுவெளியிலும் தொடர்ந்து வருகிறது. இருவரும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக இணைந்து நடனமாடி வருகின்றனர். 

குறிப்பாக ரசிகர்கள் பாவனி அமீர் ஹேஷ்டேக்குகளை அவர்களது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதற்கிடையில் பாவனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கதறி அழும் வீடியோ ஒன்று டிரெண்டாகியுள்ளது.

பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2வின் நடன ஜோடியான பாவனியின் கால்களை ஸ்ட்ரெட்ச் செய்து அவரது ஜோடியும் நடன ஆசிரியருமான அமீர் கொடுக்கும் கொடுமைகளை தாங்க முடியாமல் தான் இப்படியொரு வீடியோவை பாவனி பகிர்ந்துள்ளார். மேலும் கேப்ஷனில் எனது ஜோடி அமீரை மாற்ற ஏதாவது வழி இருக்கா என பாவனி  கேட்க அதற்கு அமீர் வாய்ப்பில்லை மேடம் என தெரிவித்துள்ளார்.