பீர் பாட்டிலை அகற்றிய கால்பந்து வீரர்...யூரோ கோப்பையில் தொடரும் சர்ச்சை

Paul fogbo Euro Cup 2021
By Petchi Avudaiappan Jun 17, 2021 11:13 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கால்பந்து
Report

யூரோ கோப்பை பத்திரிகையாளர் சந்திப்பில் பிரான்ஸ் கால்பந்து வீரர் பீர் பாட்டிலை அகற்றுமாறு கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் யூரோ கோப்பை செய்தியாளர் சந்திப்பின்போது தன்முன் வைக்கப்பட்டிருந்த கோகோ கோலா பாட்டிலை அகற்றிவிட்டு, தண்ணீர் குடிக்குமாறு, போர்ச்சுக்கல் கேப்டன் ரொனால்டோ கூறியது இணையத்தில் வைரலானது.

அதனால் அந்நிறுவனத்திற்கு சுமார் ரூ.29,377 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில் பிரான்ஸ் நட்சத்திர வீரரான பால் போக்பா தன்முன் வைக்கப்பட்டிருந்த பீர் பாட்டிலை அகற்றுமாறு தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் பால் போக்பா மதுவுக்கு எதிரானவர் என்பதால், யூரோ கோப்பை ஸ்பான்ஸர் நிறுவனமான ஹெனிக்கன் நிறுவனத்தின் பீர் பாட்டிலை அகற்றுமாறு கூறியதாக விளக்கம் தரப்பட்டுள்ளது.