விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி செய்த தவறு - கண்டிக்கும் முன்னாள் வீரர்
விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி செய்த மிகப் பெரிய தவறால் 5வது டெஸ்ட் தொடர் நடைபெறாமல் போனதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் பவுல் நியூமேன் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில், 5வது டெஸ்ட் போட்டி கொரோனா காரணமாகவும், விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பு கருதியும் விளையாடாமல் கைவிடப்பட்டது. ஆனால் பிசிசிஐ வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்குபெற்று விளையாடுவதற்காகவே இந்த செயலை செய்துள்ளதாகவும் வதந்திகள் பரவியது.
இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணியில் விளையாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பால் நியூமேன் கோலி மற்றும் ரவி சாஸ்திரி செய்து ஒரு காரியம் தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அதாவது 3வது டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் ஒரு புத்தக நூல் விழாவிற்கு சென்று இருந்தனர். சுமார் 150 பேர் கலந்து கொண்ட அந்த விழாவிற்கு இவர்கள் இருவரும் இணைந்து சென்றது மிகப்பெரிய தவறு என்று அவர் கூறியுள்ளார். மேலும் விழாவிற்குச் சென்று வந்த பின்புதான் ரவி சாஸ்திரிக்கு கொரோனா உறுதியானது.
அதன் காரணமாகவே அவர் 4வது டெஸ்ட் போட்டியில் பங்கெடுத்து விளையாடவில்லை. அதேசமயம் வீரர்களுக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டுவிட்டால் நிச்சயமாக மேலும் 10 நாட்களுக்கு அவர்கள் இங்கிலாந்தில் தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.
இதனால் மீண்டும் தொடங்க இருக்கின்ற ஐபிஎல் தொடரில் அவர்களால் பங்கெடுத்துக் கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படும். இதனடிப்படையிலும் வீரர்களின் பாதுகாப்பு கருதியும் டெஸ்ட் போட்டி கைவிடப்பட்டது எனவும் பால் நியூமேன் தெரிவித்துள்ளார்.