இலங்கையில் மத பிரச்சாரம் செய்ய முயன்ற மத போதகர் பால்தினகரன் - பாஸ்போர்ட் பறிமுதல்..!

Sri Lanka Sri Lanka Government
By Thahir Mar 27, 2023 10:43 AM GMT
Report

வர்த்தக விசாவில் இலங்கை வந்த கிருத்துவ மத போதகர் பால் தினகரனுக்கு மத கூட்டம் நடத்த இலங்கை அரசு தடை விதித்துள்ளது.

தடையை மீறி மத போதனை கூட்டம் 

இயேசு அழைகிறார் (ஜீசஸ் கால்ஸ் ) என்ற கிருத்துவ மத போதனை அமைப்பை நடத்தி வருபவர் மதபோதகர் பால் தினகரன். இவர் கடந்த வாரம் வர்த்தக விசாவில் இலங்கைக்கு வந்தார் அவருடன் அவரது மதபோதனை குழுவும் வந்தது.

paul-dinakaran-passport-confiscated-in-sri-lanka

யாழ்பாணத்தியத்தில் உள்ள மணிபே மற்றும் ரசவின் தொட்டம் பகுதிகளில் மார்ச் 23 ம் தேதி முதல் 25 தேதி வரையில் 3 நாட்களுக்கு மத பிரச்சாரக் கூட்டம் நடத்துவதற்கான துண்டு விளம்பர பிரசுரங்களை வெளிப்படையாக விநியோகித்துள்ளார்கள் ஜீசஸ் கால்ஸ் அமைப்பினர்.

இதற்கு யாழ்ப்பாண சிவசேனா அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது , அடுத்தபடியாக பால் தினகரன் மற்றும் அவரது (ஜீசஸ் கால்ஸ் ) அமைப்பினர் இங்கு வந்து மத பிரச்சார கூட்டத்தினை நடத்தக்கூடாது என தங்களது எதிர்ப்பை காவல் துறையினரிடமும் மக்களிடமும் தெரிவித்தனர் . மணிபே பகுதியை சேர்ந்த 50 மேற்பட்ட இந்துக்கள் கடிதத்தின் மூலம் டிஐஜி .க்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

பாஸ்போர்ட் பறிமுதல் 

இந்நிலையில் கடந்த வியாழகிழமை மாலை 4 மணிக்கு யாழ்ப்பாண விமான நிலையத்திற்கு வந்த பால்தினகரன் மற்றும் அவரது 'ஜீசஸ் கால்ஸ் ' அமைப்பினரை குடியேற்ற துறையினர் தடுத்து நிறுத்தினர் .

அடுத்தபடியாக அவரது வர்த்தக பாஸ்போர்ட் மற்றும் மத பிரச்சார கூட்டம் நடத்துவதற்கு ஜீசஸ் கால்ஸ் அமைப்பிற்கும் தடை விதித்தனர் , மேலும் மதப்பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினார் .