வேலூரில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 5 பேர் மரணம் - உறவினர்கள் அதிர்ச்சி

Corona Death Oxygen Vellore
By mohanelango Apr 19, 2021 12:00 PM GMT
Report

வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஐந்து நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரழந்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வரும் ஐந்து நோயாளிகள் திடீரென உயிரழந்துள்ளனர்.

இதற்கு ஆக்சிஜன் பற்றாக்குறை தான் காரணம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததாகவும் குற்றம்சாட்டியிருந்தனர்.

ஆனால் இது தொடர்பாக பதிலளித்துள்ள வேலூர் ஆட்சியர் சண்முக சுந்தரம், “ஆக்சிஜன் பற்றாக்குறையால் அவர்கள் இறந்தார்கள் என்பதில் உண்மையில்லை. இறந்தவர்களில் இருவர் கொரோனா நோயாளிகள் இல்லை” என்றுள்ளார்.