மதுரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கொரோனா நோயாளிகளின் உறவினர்கள்
கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவிவருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் பாதிப்புகளும் மரணங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
மதுரை மாவட்டத்தை பெருத்தவரை 10000க்கும் மேற்ப்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மதுரை அரசு மருத்துமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து மிக முக்கியமாக தேவைப்படுகிறது. இந்த மருந்தானது மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் வழங்கப்பட்டு வந்தன.
மதுரை மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தமிழக அரசு மருத்துவமனைகளுக்கே நேரடியாக மருந்துகளை விற்க முடிவு செய்தது.
இதனால் மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க டோக்கன் பெற்ற மக்கள் மருத்துவமனை வாசலில் குவிந்தனர். இதனால் மருந்து வாங்க வந்த நோயாளிகளின் உறவினர்கள் கண்ணீர் மல்க மருத்துவ கல்லூரி வாசல் முன்பு காத்திருந்தனர்.
பின்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நோயாளிகளின் உறவினர்கள் கூறியதாவது ஒருவாரமாக காத்திருந்து டோக்கன் வாங்கினாலும் முறையாக மருந்து கிடைக்கவில்லை அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டாள் மாவட்ட மாவட்ட நிர்வாத்திடம் கேளுங்கள் என்று அங்குமிங்கும் அழைய விடுவதாக குற்றச்சாட்டினர்.
ஆகையால் மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு முறையாக ரெம்டெசிவர் மருந்து கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நோயாளிகளின் உறவினர்கள் கோரிக்கையாக உள்ளது