மின்கம்பத்தில் மோதி தீப்பற்றிய ஆம்புலன்ஸ் ; உடல்கருகி மீட்கப்பட்ட நோயாளி - அதிர்ச்சி சம்பவம்!

Kerala Death
By Swetha May 14, 2024 10:10 AM GMT
Report

அதிவேகமாக சென்ற ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

தீப்பற்றிய ஆம்புலன்ஸ் 

கேரளா, கோழிக்கோடு மாவட்டம் நடப்புரம் பகுதியில் வசிப்பவர் சுலோச்சனா(57). இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

மின்கம்பத்தில் மோதி தீப்பற்றிய ஆம்புலன்ஸ் ; உடல்கருகி மீட்கப்பட்ட நோயாளி - அதிர்ச்சி சம்பவம்! | Patient Charred To Death As Ambulance Catches Fire

இந்த நிலையில், சுலோச்சனாவின் உடல்நிலை மோசமடைந்து கொண்டே இருந்ததால் அவரை இன்று அதிகாலை அவசர சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் இருந்து கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.

ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து : ஓட்டுனர் உள்பட சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை உயிரழப்பு

ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து : ஓட்டுனர் உள்பட சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை உயிரழப்பு

 உயிரிழந்த நோயாளி

ஆம்புலன்சில் சுலோச்சனா, அவரது கணவர் சந்திரன், உறவினர் பிரதீப், 2 செவிலியர்கள் ஆகியோரும் பயணித்தனர். அப்போது அதிவேகமாக சென்ற டிரைவர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பம் மீது மோதிய ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் சட்டென்று தீப்பற்றியது.

மின்கம்பத்தில் மோதி தீப்பற்றிய ஆம்புலன்ஸ் ; உடல்கருகி மீட்கப்பட்ட நோயாளி - அதிர்ச்சி சம்பவம்! | Patient Charred To Death As Ambulance Catches Fire

உடனடியாக, டிரைவர், செவிலியர்கள், கணவர் சந்திரன் உறவினர்கள் என அனைவரும் வெளியேறினர். ஆனால் நோயாளியான சுலோச்சனாவால் வெளியேற முடியவில்லை. இதனால், ஆம்புலன்சில் சிக்கிய சுலோச்சனா தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார், தீயணைப்புப்படையினருடன் விரைந்து வந்தனர். அங்கு பற்றி எரிந்த தீயை வெகுநேரம் போராடி அணைத்தனர். ஆம்புலன்சில் சிக்கி தீயில் கருகி உயிரிழந்த சுலோசனாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.