ரத்தக்கரை படிந்த தலயணை, சுத்தமற்ற மெத்தையில் படுக்க வைத்து சிகிச்சை : செவிலியர்களிடம் வாக்குவாதம் செய்யும் நபரின் வைரல் வீடியோ
இரவு நேரத்தில் சிகிச்சைக்கு வந்தவருக்கு ரத்தக்கரை படிந்த தலயனையை வைத்து சுகாதாரம் இல்லாமல் சிகிச்சை அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்பட்டதியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் வெளி நோயாளிகள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக 40-க்கு மேற்பட்ட வரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக சிகிச்சைக்கு வருபவர்கள் பல மணி நேரம் காத்திருந்து சிகிச்சை பெற்று வருவதாக குற்றச்சாட்டு இருந்துவரும் நிலையில் பணி நேரத்தில் டாக்டர்கள் இருப்பதில்லை என்றும் குற்றச்சாட்டு இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு மானாமதுரை சேர்ந்த சரவணன் என்பவர் இடுப்பு வலி சம்பந்தமாகவும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக மானாமதுரை அரசு மருத்துவனைக்கு வந்துள்ளார்.
ஒரு மணி நேரமாக காத்திருந்தும் டாக்டர்கள் வரவில்லை என கூறப்படுகிறது. மேலும் செவிலியர்கள் இசிஜி எடுப்பதற்காக அவரை மருத்துவமனையில் உள்ள பெட்டில் படுக்க வைத்து உள்ளனர். பின்னர் விளக்கம் கேட்டு இசிஜி-ஐ டாக்டருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்துள்ளனர்.
இசிஜி எடுக்க சரவணனை படுக்க வைத்த அந்த தலயனை முழுவதும் ரத்தக்கரையுடனும் அதேபோல் பெட்டில் விரிக்கப்பட்ட உரையும் சுகாதாரமற்ற முறையிலும் இருந்துள்ளது.
இதனால் கோபமடைந்த சரவணன், ‘ஒரு மணி நேரமாக காத்திருந்தோம் டாக்டர்கள் வரவில்லை என்றும் போதாத குறைக்கு ரத்தக் கறையுடன் சுகாதாரமற்ற முறையில் இப்படி சிகிச்சை ஏன் அளிக்கின்றீர்கள்? மக்கள் வரி பணத்தில் தான் சம்பளம் வாங்குகின்றீர்கள் என்று கேட்டுள்ளார்.
கோபடைந்த சரவணன், இரத்தகரை இருந்த தலயனை மற்றும் பெட்டில் விரிக்கபட்டிருந்த உரையை வெளியில் எடுத்து காண்ப்பித்தும், ‘இசிஜி எடுத்ததையும் டாக்டர் அனுப்புகின்றீர்க்ள் அப்ப டாக்டர் எங்கே?’ என செவிலியர்களிடம் கத்தி கேட்டும் விடியோ காட்சி வைரலாகி வருகிறது.
அதேபோல் இவருக்கு முன்னால் வந்த பெண்மணியும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து தனக்குத் தானே புலம்பும் அந்த வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது