ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு மாரடைப்பு; உயிரை காப்பாற்றிய ஊனமுற்ற நோயாளி - நெகிழ்ச்சி சம்பவம்!
மாரடைப்பு ஏற்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு உதவிய நோயாளி மற்றும் செவிலியர்.
மாரடைப்பு
இங்கிலாந்து நாட்டில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிபவர் ஷான் மெக்பிரைடு. இவர் டாமி ஸ்தீவர்ட் (72) என்ற நபரை, க்ளென் ஓ'டீ மருத்துவமனையில் இருந்து அபெர்டீன் ராயல் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் ஏற்றி புறப்பட தயாராகிக்கொண்டிருந்தார்.
டாமி ஸ்தீவர்ட் ஒரு சக்கர நாற்காலியை பயன்படுத்தும் கை,கால் ஊனமுற்ற நபர் ஆவார். அப்போது ஆம்புலன்ஸ் ஓட்டுநரான ஷான் மெக்பிரைடுக்கு மாரடைப்பு ஏற்பட்டு சரிந்துள்ளார்.
இதனை கண்ட நோயாளி டாமி ஸ்தீவர்ட் அதிர்ச்சியடைந்து, தன்னால் ஏதும் செய்ய முடியாத நிலையில் ஆவேசமாக கத்தி கூச்சலிட்டுள்ளார்.
இதனைக் கேட்ட மருத்துவமனை கேண்டீன் ஊழியர் உடனடியாக செவிலியர் ஃப்ரேயா ஸ்மித்-நிகோலிடம் கூறினார்.
நேரில் சந்தித்து நன்றி
அவர் ஓடிவந்து பார்த்து உடனடியாக 25 நிமிடங்களுக்கு மேல் ஷான் மெக்பிரைடுக்கு சிபிஆர் சிகிச்சை செய்து அவரை காப்பாற்றினார்.
இந்நிலையில் உயிர் பிழைத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த ஷான் மெக்பிரைட் தனக்கு உதவிய நோயாளி டாமி ஸ்தீவர்ட் மற்றும் செவிலியர் ஃப்ரேயா ஸ்மித்-நிகோல் ஆகியோரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
மேலும், அவர்கள் இருவரும் இல்லை என்றால் தற்போது நானில்லை எனக் கூறிய ஷான், நாளை என்ன நடக்கும் என தெரியாது. அதனால், இன்றைக்கு வாழுங்கள் என்று கூறியுள்ளார்.