இதுவரை ஒரு வெற்றி கூட இல்லை: தடுமாறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்..பத்திரனாவும் ஒரு காரணம்

Kolkata Knight Riders Matheesha Pathirana
By Sivaraj Apr 15, 2026 08:59 AM GMT
Report

நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஒரு வெற்றியைக் கூட பெற முடியாமல் தடுமாறி வருகிறது.

தொடர் தோல்விகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 32 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. 

KKR. IPL 2026

நடப்பு தொடரில் இது அந்த அணியின் தொடர்ச்சியான 4வது தோல்வியாகும். ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.

புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடைசி இடத்தில் உள்ளது. கொல்கத்தாவைத் தவிர ஏனைய அணிகள் குறைந்தது ஒரு வெற்றியை பெற்றுவிட்டன. ஆனால், கொல்கத்தா அணி ஒரு வெற்றியை பெற தடுமாறி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. 

பேட்டிங்கில் சொதப்பல்   

ஏதோ ஒரு காரணத்தினால் முக்கிய வீரர்கள் அணியில் இருந்து விலகினர். இதனால் சில சூழல்கள் அணிக்கு சாதகமாக அமையவில்லை. 

Ajinkya Rahane

அதேபோல் களத்தில் அவர்கள் எடுத்த முடிவுகளும் அவர்களுக்கு துணையாக அமையவில்லை. இந்த சீஸனில் கொல்கத்தா அணியின் முதல் ஆட்டம் தொடங்கும்போதே, முஸரபானி மற்றும் உம்ரான் மாலிக் ஆகிய இருவர் மட்டுமே சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட வேகப்பந்து வீச்சாளர்களாக அவர்களிடம் எஞ்சியிருந்தனர். 

கேமரூன் கிரீன் அதிரடி வீரராக இருந்தாலும், ஐந்து போட்டிகளில் 56 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஏனென்றால், அவர் தொடர்ச்சியாக இரண்டு ஆட்டங்களில் ஒரே இடத்தில் பேட்டிங் செய்யவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அவர் 6வது இடத்தில் களமிறங்கினார். 

மதீஷா பத்திரனா 

டாப் ஆர்டர் வீரர்கள் அதிகமாக இருப்பதால், அவர்களில் ஒருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் எப்போதும் தங்கள் வழக்கமான இடத்தில் இருந்து மாறுபட்டு பேட்டிங் செய்ய வேண்டியிருக்கும். இதுவும் கொல்கத்தா அணியின் தடுமாற்றத்திற்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.

மேலும் ஹர்ஷித் ராணா, ஆகாஷ் தீப் ஆகியோரது காயம், முஸ்தஃப்சூர் ரஹ்மான் இல்லாதது போன்றவையும் பந்துவீச்சு பலவீனத்தை காட்டுகிறது.

தாக்குதலை ஏற்படுத்தக் கூடிய வீரர் என்று எதிர்பார்க்கப்படும் மதீஷா பத்திரனா இன்னும் அணியில் இடம்பெறவில்லை என்பதும் பின்னடைவையாக உள்ளது.    

Matheesha Pathirana

KKR. IPL 2026