பதான் பட சர்ச்சை.. - ‘அவர்கள் குரைப்பவர்கள், கடிக்கமாட்டார்கள்..’ - பிரகாஷ்ராஜ் கடும் கண்டனம்..!
‘அவர்கள் சும்மா குரைப்பவர்கள்.. கடிக்கமாட்டார்கள்...’ என்று பதான் படத்தை ஆதரித்து பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
‘பதான்’ படம்
4 ஆண்டுகளுக்குப் பிறகு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ‘பதான்’ படம் கடந்த மாதம் 25-ம் தேதி வெளியானது. இப்படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார்.
‘பதான்’ படம் சாதனை
இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய பிரதேச மாநிலம், பர்வானியில் உள்ள திரையரங்கின் முன் விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அதேபோல் இந்தூர், குவாலியரிலும் பதான் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டது. தற்போது, இப்படம் 700 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
பிரகாஷ்ராஜ் கருத்து
தற்போது, பதான் பாடலுக்கு எதிரான கருத்துகளுக்கு பிரகாஷ்ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
"பதான் திரைப்படத்தை தடை செய்யவும் புறக்கணிக்கவும் அழைப்பு விடுத்தவர்கள் சும்மா "குரைப்பவர்கள்", "கடிக்கமாட்டார்கள்... தற்போது, இப்படம் 700 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இந்த முட்டாள்கள், மதவெறியர்கள். பதானை தடை செய்ய நினைத்தவர்கள், மோடியின் (பி.எம் நரேந்திர மோடி) படத்தை 30 கோடி ரூபாய் வசூலிக்கும் அளவுக்கு கூட பார்க்கவில்லை.
காஷ்மீர் பைல்ஸ் என்கிற பிரச்சார படத்தை எடுத்துள்ளார். அப்படத்தை பார்த்துட்டு சர்வதேச கலைஞர்கள் துப்பினார்கள். அப்படியும் கூட இவர்களுக்கு எல்லாம் புத்தியே வரவில்லை. இப்படத்திற்கு ஆஸ்கர் இல்லை பாஸ்கர் விருது கூட கிடைக்காது என்றார்.
தற்போது சமூகவலைத்தளங்களில் நடிகர் பிரகாஷ்ராஜின் இந்த கிண்டலுக்கு, பாஜக தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.