நாடாளுமன்றத்தில் ‘பதான்’ படம் குறித்து பாராட்டு மழை பொழிந்த பிரதமர் மோடி - வைரலாகும் வீடியோ..!

Narendra Modi India
By Nandhini Feb 09, 2023 07:10 AM GMT
Report

நாடாளுமன்றத்தில் ‘பதான்’ படம் குறித்து பிரதமர் மோடி பாராட்டு மழை பொழிந்துள்ளார்.

‘பதான்’ படம் சர்ச்சை

பாலிவுட் நட்சத்திர நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பதான்’. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியானது. இதில், ‘பேஷாராம் ரங்’ பாடலானது கடும் சர்ச்சையை கிளப்பியது. அதில் நடித்துள்ள தீபிகா படுகோனே காவி நிற உடை அணிந்து படுகவர்ச்சியாக நடனமாடி இருந்தார்.

காவி நிறத்தில் பிகினி உடையில் தீபிகா தோன்றிய காட்சிகள் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் உள்ளது என்று பல இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இப்பாடலை தடை செய்யக்கோரி வழக்குகள் தொடுக்கப்பட்டன.

‘பதான்’ படம் ரிலீஸ்

இத்தனை எதிர்ப்புகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் கடந்த ஜனவரி 25ம் தேதி ‘பதான்’ படம் இந்தியாவில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட திரைகளிலும், வெளிநாடுகளில் 2500-க்கு மேற்பட்ட திரைகளிலும் வெளியானது.

இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய பிரதேச மாநிலம், பர்வானியில் உள்ள திரையரங்கின் முன் விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அதேபோல் இந்தூர், குவாலியரிலும் பதான் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டது.

pathaan-shah-rukh-khan-narendra-modi-speech

பாராட்டு மழை பொழிந்த பிரதமர் மோடி

காஷ்மீரின் ஸ்ரீநகரில் கூட ஷாருக்கின் பதான் நிரம்பிய திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் நெகிழ்ந்து போன பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் பதான் மீது பாராட்டு மழை பொழிந்தார்.

இது குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசுகையில்,

ஸ்ரீநகரில் உள்ள திரையரங்குகள் ‘பதான்’ படம் எப்படி ஹவுஸ்ஃபுல்லாக ஓடுகிறது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது. ஏற்கெனவே உலக அளவில் 700 கோடி ரூபாய்க்கு மேல் ‘பதான்’ படம் வசூல் செய்துள்ளது.

பாலிவுட் பிரபலங்கள் மற்றும் திரைப்படங்கள் குறித்து தேவையற்ற கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு பாஜகவினரை மோடி கேட்டுக் கொண்டார்.

தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்றத்தில் பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.