‘பதான்’ படம் ரிலீஸ் - போஸ்டர்கள் எரித்து நாடு முழுவதும் இந்து அமைப்பினர் போராட்டம்...!
நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘பதான்’ படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
‘பதான்’ படம் சர்ச்சை
பாலிவுட் நட்சத்திர நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பதான்’. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியானது. இதில், ‘பேஷாராம் ரங்’ பாடலானது கடும் சர்ச்சையை கிளப்பியது.
அதில் நடித்துள்ள தீபிகா படுகோனே காவி நிற உடை அணிந்து படுகவர்ச்சியாக நடனமாடியுள்ளார். காவி நிறத்தில் பிகினி உடையில் தீபிகா தோன்றிய காட்சிகள் பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் உள்ளது என்று பல இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இப்பாடலை தடை செய்யக்கோரி வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது.
‘பதான்’ படம் ரிலீஸ்
இந்நிலையில், இத்தனை எதிர்ப்புகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் ‘பதான்’ படம் வெளியாகியுள்ளது. இன்று இந்தியாவில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட திரைகளிலும், வெளிநாடுகளில் 2500-க்கு மேற்பட்ட திரைகளிலும் ரிலீஸாகியுள்ளது.
போஸ்டர்களை கிழித்தெறிந்த கும்பல்
இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய பிரதேச மாநிலம், பர்வானியில் உள்ள திரையரங்கின் முன் விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அதேபோல் இந்தூர், குவாலியரிலும் பதான் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டது.
கர்நாடக மாநிலம், கலபுர்கியிலும் பதான் படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. பதான் படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக பஜ்ரங் தள் அமைப்பினர் அறிவித்ததை அடுத்து மும்பையில் உள்ள தியேட்டர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
பீகார், பாகல்பூரில் திரையரங்குக்கு வெளியே 'பதான்' படத்தின் போஸ்டர் கிழித்து எரித்து போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
#WATCH | Bihar: A poster of the film 'Pathaan' was torn and burnt outside a cinema hall in Bhagalpur (24.01) pic.twitter.com/aIgUdxOl6a
— ANI (@ANI) January 24, 2023