ஆஸ்தி.கேப்டன் கம்மின்ஸ் திடீர் விலகல்...புதிய கேப்டன் இவர்தான்... - வெளியான தகவல்..!

Cricket Australia Cricket Team Pat Cummins Steven Smith
By Nandhini Feb 24, 2023 06:48 AM GMT
Report

3-வது டெஸ்ட் தொடரிலிருந்து கேப்டன் பட் கம்மின்ஸ் திடீர் விலகலால், ஆஸ்திரேலிய புதிய கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. சமீபத்தில் நாக்பூரில் நடந்த தொடக்க டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

இதனையடுத்து, சமீபத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடந்தது. இப்போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

திடீரென நாடு திரும்பிய கேப்டன் பட் கம்மின்ஸ்

சமீபத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பட் கம்மின்ஸ் திடீரென்று தனது சொந்த நாட்டுக்கு திரும்பி இருக்கிறார். சில நாட்கள் அவர் ஆஸ்திரேலியாவில் தங்க இருக்கிறார்.

அவரது குடும்பத்தில் ஏற்பட்ட தீவிர நோய் காரணமாக அவர் ஆஸ்திரேலியாவிற்கு அவசர அவசரமாக சென்றுள்ளார்.

எனினும், 3-வது டெஸ்டில் கலந்து கொள்வதற்காக மீண்டும் அவர் இந்தியாவுக்கு வர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 1-ம் தேதி இந்தூர் நகரில் நடைபெற உள்ளது.

pat-cummins-ind-v-aus-cricket-steve-smith

ஸ்டீவ் ஸ்மித் கேப்டன்

இந்நிலையில், இந்தியாவிற்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் குடும்ப காரணங்களால் விலகியுள்ளதால் கம்மின்ஸுக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்பட உள்ளார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.