கடைசி டெஸ்ட் போட்டி... - இன்னும் இந்தியா திரும்பாத கேப்டன் பட் கம்மின்ஸ்... சோகத்தில் ரசிகர்கள்...!
ஆஸ்திரேலியா கிரிக்கெட் கேப்டன் பட் கம்மின்ஸ் இன்னும் இந்தியா திரும்பாததால், கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடவில்லை என்ற செய்தி வெளியாகி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திடீரென நாடு திரும்பிய கேப்டன் பட் கம்மின்ஸ்
சமீபத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பட் கம்மின்ஸ் திடீரென்று தனது சொந்த நாட்டுக்கு அவரது குடும்பத்தில் ஏற்பட்ட தீவிர நோய் காரணமாக அவசர அவசரமாக சென்றார். எனினும், 3-வது டெஸ்டில் கலந்து கொள்வதற்காக மீண்டும் அவர் இந்தியாவுக்கு வர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது.
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி கடந்த மார்ச் 1-ம் தேதி இந்தூர் நகரில் நடந்தது. ஆனால், பட் கம்மின்ஸ் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளவில்லை.
சோகத்தில் ரசிகர்கள்
குடும்ப காரணங்களால் தாயகம் சென்றுள்ள ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மிஸ் இன்னும் இந்தியா திரும்பவில்லை.
இதனையடுத்து, அகமதாபாத்தில் நடைபெற உள்ள கடைசி டெஸ்ட் போட்டியிலும், ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இது தொடர்பான செய்திகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் இந்தப்போட்டியிலும் கேப்டன் பட் கம்மின்ஸ் விளையாடவில்லையா என்ற சோகத்தில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Steve Smith is happy to serve as a stand-in #INDvAUS pic.twitter.com/SHFNMgynkN
— ESPNcricinfo (@ESPNcricinfo) March 5, 2023