"இன்னொருவருக்காக ஷோ காட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும்" - ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ் ஓப்பன் டாக்

rohit sharma virat kohli pat cummins iyon morgan
By Swetha Subash Jan 12, 2022 12:35 PM GMT
Report

ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ், 'கடந்த காலத்தில் ஸ்லெட்ஜிங் செய்திருக்கலாம்' என்பதற்காக ஸ்லெட்ஜிங்கை நாடாமல்,

வீரர்கள் இன்னொருவருக்காக தங்களை ஷோ காட்டிக் கொள்ளாமல் தாங்களாகவே இருக்க வேண்டும் என்று தனது வீரர்களிடம் கூறியுள்ளார்.

2018 ஆம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய ஊழலில் இருந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் கலாச்சாரம் எப்படியாயினும் வெற்றி பெற வேண்டும் என்ற அணுகுமுறைக்காக தீவிர மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

இந்நிலையில் நடந்துகொண்டிருக்கும் ஆஷஸ் தொடரில் ஒரு அசம்பாவித சம்பவமும் காணப்படவில்லை, அதற்காக கமின்ஸ் தனது தலைமைப் பாணியை மட்டுமல்ல, தனது அணி வீரர்களையும் பாராட்டினார்.

சிட்னி டெஸ்டில் உஸ்மான் கவாஜா இரு சதங்கள் அடித்ததை இங்கிலாந்து வீரர்கள் பாராட்டினர், அதேபோல் எதிரணி முகாமில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை ஆஸ்திரேலியர்களும் பாராட்டினர்.

ஒரு டெஸ்ட் அணியை வழிநடத்தும் முதல் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ், தலைமைத்துவத்திற்கான அவரது அணுகுமுறை இங்கிலாந்தின் இயோன் மோர்கனைப் போலவே உள்ளது என்றார் பாட் கமின்ஸ்.

இது தொடர்பாக கமின்ஸ் கூறியதாவது, “நான் வெவ்வேறு தலைவர்களையும் இயோன் மோர்கன் போன்ற ஒருவரையும் பார்க்கிறேன்.

கேப்டன் பதவி மற்றும் அவர் அணியை எப்படி ஒன்றிணைக்கிறார் என்பது பற்றிய அவரது பார்வை எனக்குப் பிடிக்கும்.

நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல்லில் இயோனுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன்,

மேலும் நாங்கள் வாழ்க்கையைப் பற்றிய ஒரே மாதிரியான கண்ணோட்டங்களைக் கொண்டுள்ளோம், ”என்று கம்மின்ஸ் கூறியதாக ‘சிட்னி மார்னிங் ஹெரால்டு தெரிவித்துள்ளது.

“நீங்கள் அதை அறிந்திருக்க வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே, அனைத்து கிரிக்கெட் அணிகளும்,

குறிப்பாக ஆஸி கிரிக்கெட் அணி ஸ்லெட்ஜிங்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க வேண்டும் என்று உலகம் விரும்பியது வெளிப்படையாகத் தெரிகிறது.

எங்கள் வீரர்கள் அனைவரும் தாங்களாகவே இருக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து ஊக்குவிக்கிறேன்.

கடந்த காலத்தில் அப்படிச் செய்திருக்கலாம் என்பதற்காக அவர்கள் யாரையோ ஈர்க்கவோ அல்லது ஸ்லெட்ஜ் செய்யவோ முயற்சிக்க வேண்டியதில்லை.

அவர்களாகவே இருங்கள். சந்தேகத்திற்கு இடமின்றி, முதல் டெஸ்ட் போட்டிகள் மிகவும் சுமூகமாக இருந்தன, மேலும் இது (ஸ்லெட்ஜிங்) கவனிக்க வேண்டிய ஒன்று... இந்த இடத்தில் உங்கள் செயல்களால் நீங்கள் வழிநடத்துகிறீர்கள்.

நான் யாரையாவது கண்டிக்க வேண்டும் என்றால் (ஸ்லெட்ஜிங்கிற்காக) நான் செய்வேன், ஆனால் இங்கே எல்லோரும் முதிர்ச்சியடைந்தவர்கள்தான்.

"எங்களிடமிருந்தும் ஆஸ்திரேலியாவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடமிருந்தும் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பது தெளிவானது.

அணியின் இந்த மாற்றத்துக்கான எல்லா கிரெடிட்டையும் நான் எடுத்துக் கொள்ள மாட்டேன், வீரர்கள் தாங்களாகவே இந்த மாற்றத்தை அடைந்துள்ளனர்.

எனது சொந்த அனுபவங்களிலிருந்து என்னால் நிறைய சொல்ல முடியும் என உணர்கிறேன். கிரிக்கெட் ஆட்டம் முன்னோக்கி செல்லும் போது பந்துவீச்சாளர்கள் கேப்டன்கள் ஆக முடியாது என்பதற்கான எந்த காரணமும் இல்லை.” என்றார் பாட் கமின்ஸ்.

ஆகவே இதுதான் கமின்சின் தாரக மந்திரம். வெற்றி மந்திரம், நம் கோலியும் பும்ராவும் ரிஷப் பண்ட்டும் இதைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஸ்லெட்ஜிங் ஒரு மோசமான நடத்தை. அபராதத்துக்குரிய குற்றம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதே இப்போதைய ஆஸ்திரேலிய அணி நிரூபிக்கிறது.